Friday, 27 January 2012
மாணவர் மணி மன்றம் அமைப்பு
2012ஆம் ஆண்டு தமிழ் இளைஞர் மணி மன்றத்திற்கு ஒரு பொற்காலம். 1952ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் மாணவர் மணி மன்றத்திற்கு அரசாங்கம் மிகப்பெரிய அளவில் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளது. அது மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள மாவட்டங்களில் இந்த மாணவர் மணி மன்றம் அமைப்புக்கு ஒரு மில்லியனுக்கு மேல் நிதியுதவி ஒதுக்கியுள்ளது மட்டுமின்றி இப்போது கட்டம் கட்டமாக வழங்கத் தொடங்கியுள்ளது. நம் நாட்டுப் பிரதமர் மாண்புமிகு டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் அவர்களுக்கு இவ்வேளையில் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. நாடு முழுவதும் உள்ள தமிழ் இளைஞர் மணி மன்றங்கள் தங்கள் மாவட்டங்களில் இந்த மாணவர் மணி மன்றம் அமைப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்.
Thursday, 24 March 2011
Subscribe to:
Posts (Atom)